இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது: தற்போது விமானங்களில் பயணிப்போர், "மொபைல் போனில்' பேச முடியாது. ஆனால், நாங்கள் புதிதாக, டில்லியிலிருந்து லண்டனுக்கு, அடுத்த மாதம், 11ம் தேதியில் இருந்து இயக்கவுள்ள, ஏ-330 ரக விமானத்தில், "மொபைல் போனில்' பேசும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். இதற்காக, அந்த விமானத்தில் "ஏரோ மொபைல்' தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அந்த விமானம், தரையிலிருந்து 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், அதிலிருந்தபடி "மொபைல் போனில்' பேசவும், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். இதுதவிர, தொடு திரை பொழுபோக்கு வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அந்த விமானத்தில் மேலும் பல வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ரிக்வே கூறினார்.
Monday, June 25, 2012
மொபைலில் பேசும் வசதியுடன் விரைவில் புதிய விமான சேவை
இதுகுறித்து பிரிட்டனின் விர்ஜின் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டீவ் ரிக்வே கூறியதாவது: தற்போது விமானங்களில் பயணிப்போர், "மொபைல் போனில்' பேச முடியாது. ஆனால், நாங்கள் புதிதாக, டில்லியிலிருந்து லண்டனுக்கு, அடுத்த மாதம், 11ம் தேதியில் இருந்து இயக்கவுள்ள, ஏ-330 ரக விமானத்தில், "மொபைல் போனில்' பேசும் வசதியை ஏற்படுத்த உள்ளோம். இதற்காக, அந்த விமானத்தில் "ஏரோ மொபைல்' தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தவுள்ளோம். இதன் மூலம், அந்த விமானம், தரையிலிருந்து 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தாலும், அதிலிருந்தபடி "மொபைல் போனில்' பேசவும், குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். இதுதவிர, தொடு திரை பொழுபோக்கு வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளோம். அந்த விமானத்தில் மேலும் பல வசதிகளையும் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஸ்டீவ் ரிக்வே கூறினார்.
அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம்!
நைஜீரியா நாட்டில் அதிகளவு ஏற்றுமதி மற்றும்
இறக்குமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தியா
முதலிடம் பிடித்து இருக்கிறது. உலகளவில் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம்
வகிக்கும் நாடும் அமெரிக்கா. இந்நாடு நைஜீரியாவிலும் தனது வர்த்தகத்தை
மேற்கொண்டுள்ளது. கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை
நைஜீரியாவின் மிகப் பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவே இருந்து வந்தது.
இந்நிலையில் இப்போது அந்த இடத்தை இந்தியா பிடித்து இருக்கிறது. 2012ம்
ஆண்டின் முதல்காலாண்டில் இந்தியா-நைஜீரியா வர்த்தகத்தின்(ஏற்றுமதி +
இறக்குமதி) மொத்த மதிப்பு 5.15 பில்லியன் டாலராக இருக்கிறது.
முதல்காலாண்டில் நைஜீரியா சுமார் 30 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி
செய்துள்ளது. இதில் இந்தியாவிற்கான ஏற்றுமதி சுமார் 4.2 பில்லியன்
டாலராகும். அமெரிக்காவிற்கான ஏற்றுமதி 3.7 பில்லியன் டாலராகும்.
ஜூலை 13-ல் அஜித்தின் பில்லா-2 ரிலீஸ்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
இந்நிலையில், சமீபத்தில் இப்படத்திற்கு தணிக்கை துறை ஏ சான்று அளித்தது. இது பட குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பட ரிலீஸ் மேலும் தள்ளிபோனது. இம்மாத இறுதியில் வெளியாகலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்கா ஆக்ஷ்ன், த்ரில்லராக அஜித் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது பில்லா-2. வருகிற ஜூலை 13ம் தேதி படத்தை ரிலீஸ் செய்கிறோம். தமிழகம் முழுக்க சுமார் 500 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்று கூறியுள்ளார்.
ஐ.சி.சி., ஒருநாள் போட்டிரேங்கிங்: தோனி பின்னடைவு
|
துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
சர்வதேச
ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை)
பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று
வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், இந்திய கேப்டன் தோனி
4வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவர், 5வது இடத்தை
இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக்குடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மற்ற இந்திய
வீரர்களான விராத் கோஹ்லி 3வது, கவுதம் காம்பிர் 17வது இடத்தில்
நீடிக்கின்றனர். தென் ஆப்ரிக்காவின் ஆம்லா, முதலிடத்தில் உள்ளார்.
அஷ்வின் முன்னேற்றம்:
பவுலர்களுக்கான
ரேங்கிங்கில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 6வது இடத்தில் இருந்து
5வது இடத்துக்கு முன்னேறினார். மற்ற இந்திய வீரர்களான ரவிந்திர ஜடேஜா
(31வது இடம்), ஹர்பஜன் சிங் (34வது), ஜாகிர் கான் (35வது), பிரவீண் குமார்
(36வது), முனாப் படேல் (50வது) ஆகியோர் "டாப்-50' வரிசையில் உள்ளனர்.
முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டசாட்சொபே உள்ளார்.
இந்தியா "நம்பர்-3':
அணிகளுக்கான
ரேங்கிங்கில், இந்திய அணி 117 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.
ஆஸ்திரேலியா (123 புள்ளி), தென் ஆப்ரிக்கா (118) முதலிரண்டு இடங்களில்
நீடிக்கின்றன. இங்கிலாந்து, இலங்கை அணிகள் தலா 112 புள்ளிகளுடன் முறையே
4வது மற்றும் 5வது இடத்தில் உள்ளன.
|
The Top 10 Tourist Destinations in India
Agra
Completed in 1653, the T?j Mahal was built by the Mughal king Sh?h Jah?n as the final resting place for his beloved wife, Mumt?z Mahal. Finished in marble, it is perhaps India’s most fascinating and beautiful monument. This perfectly symmetrical monument took 22 years (1630-1652) of hard labour and 20,000 workers, masons and jewelers to build and is set amidst landscaped gardens.
Jaipur / Udaipur
Jaipur is also popularly known as the Pink City, is the capital of the Indian state of Rajasthan. Jaipur is a very famous tourist and education destination in India.Forts & Monuments
- Hawa Mahal
- Amber Fort
- Jaigarh Fort
- Nahargarh Fort
- City Palace
- Jantar Mantar
- Jal Mahal
- Rambagh Palace
- Chandra Mahal, The City Palace, Jaipur
- Diwan-e-Aam, City Palace
- Central Museum, (Albert Hall Museum)
Goa
Goa is Famous for its pristine beaches, infact 90% of all the tourism in Goa happens only for its beautiful beaches in Coastal Areas. Goa has two main tourist seasons: winter and summer. In the winter time, tourists from abroad (mainly Europe) come to Goa to enjoy the splendid climate. In the summertime (which, in Goa, is the rainy season), tourists from across India come to spend the holidays.Kashmir
Kashmir was once called Heaven on Earth, and once of the most beautiful places in the world. However, in last couple of decades, terrorism has faded its charm – A place home to Himalayan Ranges.Kanyakumari
Kerala (Backwaters)
Old Delhi
Delhi, Capital of India has many attractions like mosques, forts and other monuments that represent India’s history. The important places in Old Delhi include the majestic Red Fort. New Delhi on the other hand houses many government buildings and embassies, apart from places of historical interest.
Ajanta Ellora
The caves are located just outside the village of Ajantha / Ellora in Aurangabad district in the Indian state of Maharashtra.
Since 1983, the Ajanta & Ellora Caves have been a UNESCO World Heritage Site.
Darjeeling
Darjeeling in India owes’ its grandeur to its natural beauty, its clean fresh mountain air and above all, the smiling resilient people for whom it is a home. Known for its natural splendor, Darjeeling’s best gift to its’ visitors is the dawn of a new day. The mountains awaken first with a tentative peeking of the sun.Mysore
Hope you have found this Top Ten Tourist Destinations in India article interesting. If you have any questions, do drop in a comment
What are you waiting for – Go ahead and book your travel tickets right now :)
Sunday, June 24, 2012
நடிகை கொஞ்சியதும் மனம் உருகினார் இந்திய பிரதமர்!
இந்தி நடிகரும், ஹேமாமாலினியின் கணவருமான தர்மேந்திராவிற்கு இந்தாண்டு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
தர்மேந்திரா BJP யின் பஞ்சாப் மாநில எம்.பி.,யாக இருந்தவர். அவரது மனைவி
ஹேமாமாலினி தற்போது BJP யின் ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். எப்படி
தர்மேந்திராவிற்கு விருது கிடைத்தது?
ஹேமாமாலினியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் ராஜ்யசபா உறுப்பினர்கள். அதனால்
பிரதமரைச் சந்தித்தார் ஹேமா. "என் கணவர் தர்மேந்திரா சினிமா உலகத்திற்காக
தொண்டாற்றியுள்ளார். அவர் BJP,யில் இருந்தாலும், BJP ஆட்சியில் இருந்த போது
அவருக்கு எதுவும் செய்யவில்லை.
என்னுடைய ராஜ்யசபா பதவிக்காலமும் முடியப்போகிறது. எனவே, தர்மேந்திராவிற்கு பத்ம பூஷன் தர, நீங்கள் உதவ வேண்டும்' என்று
கெஞ்சி வேண்டுகோள் வைத்தார் ஹேமா. அதன் பலனாக மன்மோகன் சிபாரிசில் தர்மேந்திராவிற்கு விருது கிடைத்தது.
சிந்திக்கவும்: தர்மேந்திரா எம்பியாக இருந்து மக்கள் தொண்டு செய்யவில்லை,
மாறாக தனது சினிமா துறைக்குத்தான் தொண்டு செய்துள்ளார். நாட்டின் உயர்ந்த
விருதுகளை ஏன்? நடிகர், நடிகைகளுக்கு வழங்குகிறார்கள்.
நடிகை கெஞ்சியதும் மனம் உருகினார் இந்திய பிரதமர். குஷ்பு கொஞ்சினால்
அவருக்கும் விருது கொடுக்க ஏற்ப்பாடு செய்வார். தேசத்து விவசாயிகள்
வறுமையில் சாவது தொடர்கிறது. ஏழ்மை,அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாமை என்று
மக்கள் தவிக்கும் பொழுது அதை பற்றியெல்லாம் கவலைப்படாத பிரதமர் கார்பரேட்
நிறுவனங்களின் கைக்கூலி ஆகிப்போனார்.
பாரத பிரதமர் தன்னை போன்ற ராஜியசபா உறுப்பினர்களின் சினிமா
குடும்பங்களுக்கும், பணக்காரர்களுக்கும் பதவிகளும், பரிசுகளும் கொடுப்பதில்
மூழ்கிக்கிடக்கிறார். நாடுமுழுவதும் அணு உலைகளை கட்டி இந்தியாவை இருளில்
இருந்து ஒளிரவைக்க போகிறார் இந்த அற்புத பிரதமர் நம்புங்கள்! மக்களே
நம்புங்கள்!.
கூகுள் சேமித்து வைத்திருக்கும் உங்களது தகவல்களை நீக்குவதற்கு!!
அதாவது உங்களுக்கு ஒரு ஜிமெயில் கணக்கு இருந்தால், அதில் நீங்கள் புதியதொரு
கணக்கினை உருவாக்கும் போது தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், நீங்கள்
பயன்படுத்தும் ஜிப்ளஸ், ஆர்குட், குரோம் பிரவுசர், யு-ட்யூப் என கூகுள்
நிறுவனத்தின் அனைத்து சாதனங்களிலும் பயன்படுத்தப்படும்.
கூகுள் நாம் மேற்கொள்ளும் இணையத்தளங்கள் குறித்த அனைத்து தகவல்களையும்
குறித்து வைத்துப் பயன்படுத்தும். உங்கள் தேடல்கள் மற்றும் பார்க்கும்
தளங்கள் ஆகிய அனைத்தும் அதன் தகவல் தளத்தில் பதிவாகும். தேவைப்படும்
நேரத்தில் இவை பயன்படுத்தப்படும்.
கூகுள் இது போல நம் இணைய வேலைகளைப் பின்பற்றாமல் இருக்க வேண்டும் எனில்,
அதற்கான எதிர் வேலைகளையும் நாம் மேற்கொள்ளலாம். இதனை ஒரு பட்டன் அழுத்தி
மேற்கொள்ளலாம் என்பது இன்னும் ஆர்வமூட்டும் ஒரு தகவலாகும். இதனை எப்படி
மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
உங்கள் கூகுள் கணக்கில், பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் கொடுத்து நுழைந்த பின்னர்,https://www.google.com/history
என உங்கள் உலாவியின் முகவரி விண்டோவில் டைப் செய்திடவும் அல்லது கூகுள்
சாதனங்களான கூகுள் ப்ளஸ் அல்லது கூகுள் தேடல் தளத்தில் மேலாக வலது மூலையில்
உள்ள கீழ்விரி மெனுவில் Account Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த அக்கவுண்ட் செட்டிங்ஸ் பக்கத்தில், Services என்ற இடத்திற்குச்
செல்லவும். அடுத்து Go to web history என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும்.
இதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் நீங்கள் அண்மையில் சென்ற
தளங்களின் முகவரிகள் மேற்கொண்ட தேடல்கள் அனைத்தும் அங்கு பட்டியலாக
இருப்பதனைக் காணலாம்.
இங்கு உள்ள Remove
all Web History என்ற கிரே கலர் பட்டனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து
ஓகே பட்டன்களைக் கிளிக் செய்து வெளியேறவும். இதனைத் தொடர்ந்து, உங்களின்
இணைய தேடல் பக்கங்கள், தகவல் தேடல் கேள்விகள் அனைத்தும் கூகுளின்
கரங்களுக்குள் சிக்காது.
Subscribe to:
Posts (Atom)
