Tuesday, June 19, 2012

விரல் நுனிகளையும் சீராக்குதல்

விரல் நுனிகளையும் சீராக்குதல்

மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று இவ்வசனத்தில் (75:4) கூறுகிறான்.

விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடலில் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் என்ன வென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.

ஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.

ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.

**எய்ட்ஸை தடுக்க இஸ்லாம் காட்டும் வழி**

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு...


**எய்ட்ஸை தடுக்க இஸ்லாம் காட்டும் வழி**


இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டு முஸ்லிம்கள் அனைவரும் கடைப்பிடித்து ஒழுகக் கூடிய சுன்னத் எனும் விருத்த சேதனம் எய்ட்ஸ் நோய் வராமல் தடுக்கும் என்று அவ்வப்போது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டு வருகின்றது.


தற்போது ஒரு நாட்டின் எம்பிக்கள் எய்ட்ஸை ஒழிக்க உதவும் விருத்த சேதனத்தை ஊக்குவிப்பதற்காக தாங்கள் விருத்த சேதனம் செய்யப்போவதாக முடி செய்துள்ளனர். இது குறித்து தினமலர் நாளேடு
22/5/2012 பின்வரும் செய்தியை வெளியிட்டுள்ளது,


**((லண்டன்: எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பிரசாரத்துக்கு முன்னோடியாக, ஜிம்பாப்வே நாட்டு எம்.பி.,க்கள், 170 பேர் "சுன்னத்' செய்து கொள்ள முன்வந்துள்ளனர்.

ஒழுக்கக் குறைபாட்டின் காரணமாக, ஆப்ரிக்க நாடுகளில், எய்ட்ஸ் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க, கடந்த 2010ம் ஆண்டு முதல், தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுன்னத் செய்து கொள்வதால், எய்ட்ஸ் நோய் பரவும் வாய்ப்பு குறைவு என்பதால், ஆப்ரிக்க தலைவர்கள் பலர், சுன்னத் செய்து கொண்டுள்ளனர்.

ஜிம்பாப்வே நாட்டில், முஸ்லிம் அல்லாத இளைஞர்களும், "சுன்னத்' செய்து கொள்கின்றனர். ஜிம்பாப்வே நாட்டு பார்லிமென்டில், கடந்த வாரம், எய்ட்ஸ் தடுப்பு குறித்த பிரசார கருத்தரங்கு நடந்தது. இதில் பேசிய எம்.பி., ஒருவர், பெண்கள் அழகாக இருப்பதால், அவர்கள் மீது ஆண்களுக்கு ஆசை வருகிறது. எனவே, பெண்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும். இதன் மூலம், எய்ட்ஸ் நோய் பரவுவதை தடுக்கலாம்' என்றார். இதற்கு, பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எய்ட்ஸ் நோய் தடுப்பு விஷயத்தில், எம்.பி.,க்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என, தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, 170 எம்.பி.,க்கள், "சுன்னத்' செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ளனர்.

பெண் எம்.பி.,க்கள், தங்கள் கணவருக்கு சுன்னத் செய்ய வற்புறுத்துவோம் என்று உறுதிமொழி ஏற்றுள்ளனர். முஸ்லிம் மத பெரியவர்களை கொண்டு, இந்த சடங்கு செய்வதற்கு பதில், மருத்துவர்களை கொண்டு, "சுன்னத்" செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.))**


"இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்."
-அல்குர்ஆன் 61 : 9

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை...!!!

 

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா? ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம்.

இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறதுபரோட்டாகடை, அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு விருதுநகர் பரோட்டா , தூத்துக்குடி பரோட்டா,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.

இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. வட மாநிலங்களில்ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால்,மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?

மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு,அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.


இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.

பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கப்படுகிறது, நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?

நன்றாக மாவாக அரைக்க பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெராக்சைடு (benzoyl peroxide ) என்னும் ரசாயினம் கொண்டு வெண்மை யாகுகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயினம்
இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிரழிவு க்கு காரணியாய் அமைகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயினம் மாவை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomottoபோன்ற உப பொருட்களும் சேர்க்க படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நிரழிவு வர துணை புரிகிறது .

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல

மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும் . எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்


இதில் சத்துகள் எதுவும் இல்லை

குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது ,
எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakeryபண்டங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

Europe union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன .

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல்,இருதய கோளறு, நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு .

நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விட்டனர்.மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

இப்போதாவது நாமும் விழித்து கொள்வோம். நம் தலைமுறையை காப்போம்.

நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை,கேழ்வரகு, கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம் .

இந்த பதிவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து விழிப்புணர்வு அடையச்செய்யுங்
. தயவு செய்து இதை பகிரவும், முடிந்த அளவுக்கு அவார்னஸை பரப்புங்கள்..